தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் தவெக முன்னிலை வகிப்பதால், சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்ற இந்த இரண்டு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதுராந்தகம் தொகுதியில் 10,409 வாக்குகள் வித்தியாசத்திலும், தாராபுரம் தொகுதியில் 5,486 வாக்குகள் வித்தியாசத்திலும் தவெக முன்னிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் வாக்கு வித்தியாசம் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில், சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் திரண்டு ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இறுதி முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
தாராபுரம், மதுராந்தகத்தில் தவெக முன்னிலை - பனையூர் அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்
தாராபுரம், மதுராந்தகத்தில் தவெக முன்னிலை - பனையூர் அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் தவெக முன்னிலை வகிப்பதால், சென்னை பனையூர் தலைமை அலுவலகத்தில் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
