திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை சேர்ந்தவர் டாக்டர் கணேஷ். இவர் அப்பகுதியில், புதிதாக கிளினிக் தொடங்க, ஒரு வாரத்திற்கு முன், தடையில்லா சான்றிதழ் கேட்டு, மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்நிலையில், சான்றிதழ் வழங்க, மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சரவணன், டாக்டர் கணேஷிடம், திருவண்ணாமலை: புதிய கிளினிக்கிற்கு தடையில்லா சான்று வழங்க, ரூ. 10,000 லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், இது குறித்து, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் டாக்டர் கணேஷ் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசாரின் அறிவுறுத்தலின்படி நேற்று மாலை, டாக்டர் கணேஷ் ரூ.10,000 லஞ்ச பணத்தை தீயணைப்பு அலுவலர் சரவணனிடம் வழங்கினார். அப்போது, லஞ்ச பணம் ரூ.10,000 பெற்ற திருவண்ணாமலை மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சரவணனை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி தீயணைப்பு அலுவலர் கைது
திருவண்ணாமலையில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி தீயணைப்பு அலுவலர் சரவணனை போலீசார் கைது செய்தனர்.
புதிய கிளினிக்கிற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக, திருவண்ணாமலை மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சரவணன் மீது புகார் அளிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், பணத்தை பெற்றபோது சரவணன் கைது செய்யப்பட்டார்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




