அதிமுகவில் இருந்து ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களாக ராஜினாமா செய்து விட்டு தவெக வில் இணைந்தாலும் கூட திமுகவில் இருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட விலகி தவெக வில் இணைய வில்லை என திமுக தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசியலில் திமுகவைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையத் தயாராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திமுகவிலிருந்து எந்த எம்.எல்.ஏ.வும் தவெகவில் இணையவில்லை என அக்கட்சியினர் கூறி வந்த நிலையில், தவெக தரப்புடன் சில திமுக எம்.எல்.ஏ.க்கள் திரைமறைவில் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து, பேட்டி ஒன்றில் கூட திமுகவில் இருந்து எம்எல்ஏக்கள் தவெக வுக்கு வருவார்கள் என செங்கோட்டையன் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடைபெற்று கொண்டிருக்கும் இடைதேர்தல் முடிவுக்காக தான் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இடைதேர்தல் முடிவுகளை பொறுத்து, திமுகவில் தொடரலாமா அல்லது தங்களுடைய எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணைந்து விடலாமா என என்கிற முடிவை திமுக எம் எல் ஏ உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நடைபெற்று கொண்டிருக்கும் இடைதேர்தலில் திமுக தோல்வியை தழுவினால், இனியும் திமுகவில் பயணிப்பது சரியாக இருக்காது என தவெக வுக்கு தாவுவதற்கு தயாராக இருக்கிறார்கள் 8 திமுக எம் எல் ஏ என்கிற தகவல் திமுக தலைமையை கதிகலங்க செய்துள்ளது. தொடர்ந்து, நடந்து முடிந்துள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு பாதகமாகவே முடியும் என தேர்தல் களத்தில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது, இரண்டு தொகுதிகளிலும் திமுக 3 இடம் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், இதில் தாராபுரம் தொகுதியில் திமுக டெபாசிட் இழக்க கூட வாய்ப்புள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
தவெக-க்கு தாவும் திமுகவின் 8 எம்.எல்.ஏக்கள்
இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணையத் தயாராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியலில் திமுகவைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையத் தயாராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Team - Editorial
இப்போது வெளியானது2 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
