தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பண்டாரஞ்செட்டிவிளையைச் சேர்ந்தவர் ஜெரால்டு. இவர் திசையன்விளையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு தனது காரில் வள்ளியூரில் இருந்து திசையன்விளை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.அப்போது, திசையன்விளை அருகே மிட்டாதார்குளம் நம்பியாற்றுப் பாலம் பகுதியில் வந்த போது, எதிரே வந்த அரசு பேருந்து அவரது கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது. இந்நிலையில்,, காருக்குள் சிக்கிய ஜெரால்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார், ஜெரால்டின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளை அருகே அரசு பேருந்து கார் நேருக்கு நேர் மோதி விபத்து - வங்கி மேலாளர் பலி
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், தனியார் வங்கி மேலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், தனியார் வங்கி மேலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




