உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தவெக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை என்றும், இந்த ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த மைத்ரேயன் என்பவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர், தினமும் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.இந்நிலையில், நேற்று காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு தந்தையுடன் ஆட்டோவில் சென்றபோது, அடையாறு இந்திரா நகர் வாட்டர் டேங்க் அருகே இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் ஆட்டோவை வழிமறித்தனர். அவர்கள் மைத்ரேயனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலை தொடர்பாக இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மு.க.ஸ்டாலின், சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை என்றும், முதலமைச்சருக்கு அக்கறையும் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதலும் இல்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும், குற்றவாளிகளுக்கு பயமில்லை எனக் குறிப்பிட்டு, தவெக ஆட்சியை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50