தமிழகம் முழுவதும் இன்று மதுபானக் கடைகளை திறக்காமல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தினமும் வழக்கமாக மதியம் 12 மணிக்கு திறக்கப்பட வேண்டிய கடைகள், மதியம் 1 மணி வரை திறக்கப்படவில்லை.காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும்போது வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 வழங்கும் புதிய நடைமுறையை இன்று முதல் அமல்படுத்த அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதற்கான போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும், கூடுதல் பணியாளர்கள் மற்றும் காலி பாட்டில்களை சேமித்து வைக்க தனி இடவசதி தேவை என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த நடைமுறையை உடனடியாக செயல்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊழியர்கள் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சங்க நிர்வாகிகள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னையில் பல கடைகள் திறக்கப்படாததால் மதுபானம் வாங்க வந்தவர்கள் கடைகள் முன்பு திரண்டனர். அம்பத்தூரில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு பகுதிகளில் பரபரப்பு நிலவியது.
தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகள் திறக்கப்படாமல் ஊழியர்கள் போராட்டம்
தமிழகம் முழுவதும் மதுபானக் ஊழியர்கள் போராட்டத்தால் பல கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் மதுபானம் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மதுபான விற்பனை பாதிக்கப்பட்டது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




