உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

சென்னை கொரட்டூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – பெண் பலி

சென்னை கொரட்டூரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி பெண் அகிலா உயிரிழந்தார். கணவர், மகன் உயிர் தப்பினர்.

சென்னை கொரட்டூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி பெண் அகிலா பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் ரமணியும் மகன் கார்த்திக்கும் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
சென்னை கொரட்டூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – பெண் பலி!

சென்னை கொரட்டூரில் உள்ள கணேஷ் பிருந்தாவனம் அடுக்குமாடி குடியிருப்பில்  ரமணி என்பவர் தனது மனைவி அகிலா மற்றும் மகன் கார்த்திக்குடன் வசித்து வருகிறார். இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அகிலா படுக்கையறையில் இருந்த போது திடீரென வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது குளிர்சாதனப் பெட்டி வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து வீட்டில் தீ வேகமாகப் பரவிகே கொண்டிருப்பப்பதால் ரமணியும் அவரது மகன் கார்த்திக்கும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பினர். இதையடுத்து, வீட்டின் படுக்கையறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இருந்த அகிலாவால் வெளியே வர முடியாததால் அகிலா தீயில் சிக்கி உயிரிழந்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50