ஈரோடு மாவட்டம் அய்யம்பாளையம் அருகே வடிவுள்ள மங்கலம், குன்னிக்காட்டுப் புதூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் நவீன். இவர் தட்டக்கரை வனச்சரகத்தில் வனக்காப்பாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று காலை சுமார் 7 மணியளவில் குரூப் 2 தேர்வு எழுதுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் பர்கூரில் இருந்து அந்தியூர் நோக்கிச் சென்றார். அப்போது தாமரைக்கரை – அந்தியூர் சாலையில் உள்ள நெய்க்கரை வளைவு அருகே எதிரே வந்த பிக்கப் வேன், அவரது மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட நவீனுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், வேனின் பின்சக்கரம் அவரது நெஞ்சில் ஏறி இறங்கியது. இதையடுத்து அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரூப் 2 தேர்வு எழுதச் சென்ற வனக்காப்பாளர் விபத்தில் பலி
பர்கூர் மலைப்பாதையில் வேனும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வனக்காப்பாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பர்கூர் மலைப்பாதையில் குரூப் 2 தேர்வு எழுதச் சென்ற வனக்காப்பாளர் நவீன், பிக்கப் வேன் மோதிய விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




