உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

தண்ணீர் தர மறுக்கும் காங்கிரசுடன் கூட்டணி ஏன் – தவெகவுக்கு சீமான் கேள்வி

தண்ணீர் வழங்க மறுக்கும் காங்கிரசுடன் தவெக ஏன் கூட்டணி அமைக்கிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரசுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைப்பது ஏன் என சீமான் கேள்வி எழுப்பியதுடன், அரசியல் நடவடிக்கைகளையும் விமர்சித்துப் பேசினார்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
தண்ணீர் தர மறுக்கும் காங்கிரசுடன் கூட்டணி ஏன் – தவெகவுக்கு சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கூறும் காங்கிரஸ் கட்சியுடன் தமிழக வெற்றிக் கழகம் எவ்வாறு கூட்டணி அமைக்க முடிந்தது எனக் கேள்வி எழுப்பினார். காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் இருக்கும் கட்சியால் மாநில உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்றும் விமர்சித்தார். இதை தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் பேசுவதற்குப் பதிலாகச் செயல்பாட்டில் சாதித்துக் காட்டுவார் எனக் கூறுகிறார்கள். ஆனால், இதுவரை அவர் செய்த சாதனை என்ன என்று கேள்வி எழுப்பினார். செஞ்சி சிறுமி மாயமான விவகாரம், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வைத் தகுதி நீக்கம் செய்து மீண்டும் தேர்தலைச் சந்திக்க ஏன் தயங்குகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பிய சீமான், தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே முக்கியமல்ல, நேர்மையும் முக்கியம் என்றார். தோற்றாலும் களத்தில் தொடர்ந்து இருப்பவனே உண்மையான வீரன் என்றும் தெரிவித்தார். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50