கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதலமைச்சர் விஜய் நாளை திறந்து வைக்கிறார். இந்த திறப்பு விழாவை முன்னிட்டு நூலக வளாகம் முழுவதும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் விஜய் நாளை காலை கோவை வந்தடைகிறார். தொடர்ந்து, பெரியார் சிலையைத் திறந்து வைத்து, நூலகம் மற்றும் அறிவியல் மையத்தைப் பார்வையிடுகிறார். பின்னர் நடைபெறும் அரசு விழாவில் முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். இந்நிலையில், முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கோவையில் 2,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், விமான நிலையம், காந்திபுரம் மற்றும் விழா நடைபெறும் பகுதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் பெரியார் நூலகத்தை நாளை திறந்து வைக்கிறார் - முதலமைச்சர் விஜய்
கோவையில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்தை முதலமைச்சர் விஜய் நாளை திறந்து வைக்கிறார்.
கோவையில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்தை முதலமைச்சர் விஜய் நாளை திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கோவை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




