நெல்லை மாநகராட்சி கணக்குப் பிரிவு உதவி ஆணையாளராக பணியாற்றி வந்தவர் பாலசுந்தரம். இவர் தூத்துக்குடியில் இருந்து தினமும் காரில் பணிக்கு வந்து செல்வார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த பாலசுந்தரம், 2-வது மாடியில் உள்ள தனது அறையில் ஒப்பந்ததாரர் மற்றும் ஊழியர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், மாநகராட்சி ஆணையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள், பாலசுந்தரத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாலசுந்தரம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அலுவலகத்தில் பணியில் இருந்தபோது உதவி ஆணையாளர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் உதவி ஆணையாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊழியர்களிடம் பேசிக்கொண்டிருந்த உதவி ஆணையாளர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊழியர்களிடம் பேசிக்கொண்டிருந்த உதவி ஆணையாளர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநகராட்சி அலுவலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
