சென்னை கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். 2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றவர் வி.எஸ். பாபு. அவரது மறைவுச் செய்தி அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, வி.எஸ். பாபுவின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். வி.எஸ். பாபு மறைவுக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும், வி.எஸ். பாபுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். இதேபோல், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 70 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாபுவின் உடல்நிலை தேறி வருவதாக செய்திகள் வந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். வி.எஸ். பாபுவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கொளத்தூர் எம்.எல்.ஏ. வி . எஸ். பாபு மறைவு - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மறைவால் அரசியல் வட்டாரத்தில் சோகம் நிலவுகிறது. மு.க.ஸ்டாலின், ஆளுநர், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




