சென்னை நங்கநல்லூர் லட்சுமிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனால் 2023-ம் ஆண்டு கும்பகோணம் சென்ற போது, குழந்தை பாக்கியம் மற்றும் குடும்பப் பிரச்சினைகளுக்கு பரிகாரம் செய்யப்படும் என்ற விளம்பரத்தைப் பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டனர். அப்போது பேசிய ஜோதிடர் ராமநிரஞ்சன் குடும்பத்தில் பிரச்சினைகள் இருப்பதாகவும், பரிகாரம் செய்தால் தீர்வு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய காயத்ரி, 2023 முதல் 2025-ம் ஆண்டு வரை கூகுள் பே மூலம் சிறுகச் சிறுக மொத்தம் ரூ.56 லட்சம் வழங்கியுள்ளார். ஆனால், பிரச்சினைகள் தீராததால் பணத்தைத் திருப்பிக் கேட்ட போது ஜோதிடர் மறுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் பழவந்தாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ராமநிரஞ்சனை கைது செய்தனர்.
குழந்தை பிறக்க பரிகாரம் செய்வதாகக் கூறி பெண்ணிடம் ரூ.56 லட்சம் மோசடி - ஜோதிடர் கைது
குழந்தை பிறக்க பரிகாரம் செய்வதாகக் கூறி பெண்ணிடம் ரூ.56 லட்சம் மோசடி செய்த ஜோதிடரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்க பரிகாரம் செய்வதாகக் கூறி 2023 முதல் 2025 வரை ரூ.56 லட்சம் வசூலித்து மோசடி செய்த கும்பகோணத்தைச் சேர்ந்த ஜோதிடரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




