தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழமைவாய்ந்த குற்றாலநாதர் கோவிலுக்குள் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, குற்றால மெயின் அருவிக்கரையில் அமைந்துள்ள குற்றால நாதர் கோவிலுக்கு மலைப்பாம்பு, உடும்பு உள்ளிட்ட வன உயிரினங்கள் அவ்வப்போது வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், கோவிலில் உள்ள நகைகள் மற்றும் பொருட்களைப் பாதுகாக்கும் பெட்டக அறையை ஊழியர்கள் திறந்தபோது, அங்கு மலைப்பாம்பு பதுங்கியிருப்பதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் கோவிலுக்கு விரைந்து வந்த வனத்துறையினர், மலைப்பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். கோவிலில் மலைப்பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
குற்றாலநாதர் கோவிலுக்குள் மலைப்பாம்பு
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழமைவாய்ந்த குற்றாலநாதர் கோவிலுக்குள் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் உள்ள பெட்டக அறைக்குள் சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு பதுங்கியிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோவில் ஊழியர்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




