பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எனத் தனித்தனியாக நடைபெற்ற இப்போட்டியை வருவாய் கோட்டாட்சியர் கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆண்களுக்கு 20 கிலோமீட்டர் தூரமும், பெண்களுக்கு 15 கிலோமீட்டர் தூரமும் போட்டிக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கிய போட்டி விஜய் வித்யாலயா பள்ளி, அண்ணா நகர், பாஞ்சாலியூர், கொண்டேபள்ளி, திப்பனப்பள்ளி, கும்மனூர் வழியாகச் சென்று மீண்டும் விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும், நான்காவது முதல் பத்தாவது இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் நடராஜமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி – மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
கிருஷ்ணகிரியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.5,000 வரை பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




