கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை, நொகனூர் மற்றும் மரக்கட்டா வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. இந்த யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த இரண்டு காட்டு யானைகள் அங்கிருந்து வெளியேறி மாரச்சந்திரம், சீனிவாசபுரம், சாப்ரானப்பள்ளி, தின்னூர், லக்கசந்திரம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாகச் சென்றன. அப்போது விவசாய நிலங்களில் பயிர்களைச் சேதப்படுத்திய யானைகள், தற்போது கொத்தூர் கிராமப் பகுதியில் சுற்றித் திரிகின்றன.இன்று காலை இரண்டு யானைகளும் அஞ்செட்டி- தேன்கனிக்கோட்டை சாலையில் நடந்து சென்றன. இதனால் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். யானைகள் சாலையைக் கடப்பதற்காக வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். யானைகள் தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித்திரிவதால், அவற்றை அடர்ந்த கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர் அருகே சாலையில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகள்
ஓசூர் அருகே கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்திய இரண்டு காட்டு யானைகள் சாலையில் உலவியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை அருகே கிராமங்களுக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தி, அஞ்செட்டி சாலையில் உலவின. யானைகளை அடர்ந்த கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என கிராம மக்கள் வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




