உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

ஊத்தங்கரை அருகே லாரியும் வேணும் நேருக்கு நேர் மோதி விபத்து – 3 பேர் காயம்

ஊத்தங்கரை அருகே லாரியும் வேணும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தூக்கக் கலக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரியும் வேன் மீது மோதியதில் 3 பேர் காயமடைந்தனர். இதில் இருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
ஊத்தங்கரை அருகே லாரியும் வேணும் நேருக்கு நேர் மோதி விபத்து – 3 பேர் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே சேலம் – வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் வெப்பாலம்பட்டி அருகே இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்தது. ஈரோட்டில் இருந்து பழைய இரும்புப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கிச் சென்ற லாரியை முகமது யாசர் ஓட்டி வந்தார். அப்போது தூக்கக் கலக்கத்தில் இருந்த அவர், வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சாலை மையத் தடுப்பில் மோதி, எதிரே வந்த வேன் வாகனத்தின் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் விஜய் ஆனந்தன் என்பவருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருடன் பயணித்த சக்தி என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. லாரி ஓட்டுநர் முகமது யாசருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, காயமடைந்த மூவரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவர் உள்நோயாளிகளாகவும், ஒருவர் புறநோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50