அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அரசை விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், திராவிட மாடல் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில உதவித்தொகை வழங்கப்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடப்பாண்டில் 365 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 64 மாணவர்களுக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால் தேர்வாகியும் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க முடியாமல் பல மாணவர்கள் தவித்து வருவதாகக் கூறியுள்ளார். இந்தத் திட்டத்தை நம்பி தங்களது பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிய பெற்றோர், நகைகளை அடகு வைத்தும் வட்டிக்குக் கடன் வாங்கியும் கல்விக் கட்டணம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, மாணவர்களின் கல்வியைப் பாதிக்காமல், அவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
உயர்கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிக்கும் தவெக அரசு - உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்தார்.
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 365 மாணவர்களில் 64 பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய உதயநிதி ஸ்டாலின், மீதமுள்ள மாணவர்களுக்கு உடனடியாக நிதி வழங்க தமிழக அரசை வலியுறுத்தினார்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




