சென்னை இராயபுரம் ரயில் நிலையத்தின் 170 ஆண்டு கால பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையில், தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு பாரம்பரிய விழா நடைபெற்றது. இதையடுத்து, எழும்பூரில் இருந்து இராயபுரம் வரை பழங்கால நீராவி இரயில் இன்ஜின் பொருத்தப்பட்ட சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. தென்னிந்தியாவின் முதல் இரயில் நிலையம் என்ற பெருமையைப் பெற்ற இராயபுரம் இரயில் நிலையம், கடந்த 1856-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஜூலை 1-ம் தேதி இராயபுரத்தில் இருந்து வாலாஜா சாலை வரை முதல் பயணிகள் இரயில் இயக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவு கூரும் வகையில் நடைபெற்ற விழாவில், தெற்கு இரயில்வே பொதுமேலாளர் சுப்பா ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் சிறப்பு இரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும், இராயபுரம் இரயில் நிலையத்தின் பழைய புகைப்படங்கள், நூற்றாண்டு பழமையான அறிவிப்புப் பலகை, ஸ்டேஷன் மாஸ்டர் மேஜை, டிக்கெட் அச்சிடும் இயந்திரம் உள்ளிட்ட அரிய பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. பழங்கால சிக்னல் கருவிகள், விளக்குகள் உள்ளிட்ட பொருட்களையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இராயபுரம் இரயில் நிலையத்தின் 170 ஆண்டு பாரம்பரிய விழா – பழங்கால நீராவி இரயில் இயக்கம்
சென்னை இராயபுரம் இரயில் நிலையத்தின் 170 ஆண்டு பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில், பழங்கால நீராவி இரயில் இயக்கப்பட்டு அரிய பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
இராயபுரம் இரயில் நிலையத்தின் 170 ஆண்டு பாரம்பரிய விழாவையொட்டி, எழும்பூரில் இருந்து பழங்கால நீராவி இரயில் இயக்கப்பட்டது. மேலும், பழைய புகைப்படங்கள் மற்றும் அரிய இரயில்வே பொருட்கள் கண்காட்சியில் பார்வையாளர்களைக் கவர்ந்தன.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




