கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முதலாவது சிப்காட் பகுதியில் புதிதாக தொழிற்சாலை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், கட்டிடத்தின் மேல் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சீனு, குமரேசன் , மைககேல் ஆகிய மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களது உடல்களை மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் இருந்து மீட்டனர். மேலும், கட்டிட இடிபாடுகளுக்குள் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதை அறிய தீவிரமாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
ஓசூரில் கட்டுமானப் பணியின் போது தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விபத்து – மூவர் பலி
ஓசூர் சிப்காட் பகுதியில் புதிய தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சீனு, குமரேசன், மைக்கேல் ஆகிய மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் தொழிற்சாலை கட்டுமானப் பணியின் போது கான்கிரீட் அமைத்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் யாரேனும் சிக்கியுள்ளனரா என மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
