இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாசிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் மீனவர் சந்தனமாரி. இவருக்கு பரத், காளீஸ்வரன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை சந்தனமாரி தனது மகன்களுடன் நாட்டுப்படகில் கடலுக்குச் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பரத் படகிலிருந்து தவறி கடலில் விழுந்து அலையில் சிக்கி தத்தளித்தார். இதனைப் பார்த்த தந்தை சந்தனமாரி, உடனடியாக படகிலிருந்து கடலில் குதித்து மகனைக் காப்பாற்ற முயன்றார். அப்போது வீசிய ராட்சத அலையில் சிக்கிய அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார். இதற்கிடையே சக மீனவர்கள் கடலில் தத்தளித்த பரத்தை பத்திரமாக மீட்டனர். இந்த தகவலறிந்த கடலோரப் பாதுகாப்புக் குழும போலீசார் மற்றும் உள்ளூர் மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் மாயமான சந்தனமாரியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் மீனவ கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் அருகே கடலில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்ற தந்தை மாயம்
இராமநாதபுரம் அருகே கடலில் மூழ்கிய மகனை மீட்க முயன்ற மீனவர் சந்தனமாரி ராட்சத அலையில் சிக்கி மாயமானார்.
இராமநாதபுரம் தொண்டி அருகே கடலில் தவறி விழுந்த மகனை மீட்கக் குதித்த தந்தை சந்தனமாரி ராட்சத அலையில் சிக்கி மாயமானார். மகன் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், தந்தையைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




