உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

முதலமைச்சர் பயணத்தை எதிர்க்கட்சியினர் அரசியலாக்குகின்றனர் – அமைச்சர் ஷாஜகான் பேட்டி

நாகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஷாஜகான், முதல்வரின் அரசுப் பயணத்தை எதிர்க்கட்சியினர் அரசியலாக்குவதாகக் கூறினார். மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி, மேம்பாலப் பணிகள் குறித்தும் விளக்கமளித்தார்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
முதலமைச்சர் பயணத்தை எதிர்க்கட்சியினர் அரசியலாக்குகின்றனர் – அமைச்சர் ஷாஜகான் பேட்டி

 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 474 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.53.76 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை தற்போதைய அரசு திறந்து வைப்பது வழக்கமான நிர்வாக நடைமுறைதான் என்றார்.மேலும், நாகை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.600 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அக்கரைப்பேட்டை மேம்பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் இம்மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்றும் கூறினார்.நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விரைவில் சாதகமான அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50