திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே உள்ள சுப்பையாபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்காளை. இவருக்கும், அவரது தாய் மாமா தாமஸ் பாண்டியன் என்பவருக்கும் இடையே இடப்பிரச்னை தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை ஏற்பட்ட தகராறின்போது, தாமஸ் பாண்டியன் மற்றும் அவரது மைத்துனர் அஜீத்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து முத்துக்காளையை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முத்துக்காளை, உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான தாமஸ் பாண்டியன் மற்றும் அஜீத்குமார் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். மேலும், இரு தரப்பினருக்கும் இடையே நிலவிய இடப்பிரச்னை தொடர்பாக ஆகஸ்ட் 25ஆம் தேதி இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகவும், இதுதொடர்பாக மானூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இடப்பிரச்சனையில் வாலிபர் வெட்டி படுகொலை - இருவருக்கு போலீசார் வலை
திருநெல்வேலியில் இடப்பிரச்சனையில் வாலிபர் வெட்டி படுகொலை செய்த இருவருக்கு போலீசார் தேடி வருகின்றனர்.
மானூர் அருகே இடப்பிரச்னை முன்விரோதத்தில் அக்கா மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த தாய் மாமா மற்றும் அவரது உறவினரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




