நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இளைஞர்களின் கல்வி மற்றும் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில், ரூ.22 லட்சம் மதிப்பில் புதிய படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. கணினி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்தப் படிப்பகத்தை, வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் முகாமில் வசிக்கும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தென்னரசு, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். முகாமில் வசிக்கும் இளைஞர்கள் தங்களது வரலாற்றை அறிந்து கொள்வதற்கும், பொது அறிவு மற்றும் கல்வி அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கும் இந்தப் படிப்பகம் உதவியாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார். மேலும், தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை முன்வைத்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் த.வெ.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையையும் அமைச்சர் தென்னரசு தெரிவித்தார்.
ஆட்சியின் சாதனைகளால் வெற்றி நிச்சயம் – அமைச்சர் தென்னரசு
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக அமைக்கப்பட்ட படிப்பகத்தை அமைச்சர் தென்னரசு திறந்து வைத்தார்.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு பங்கேற்று, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக அமைக்கப்பட்ட படிப்பகத்தை திறந்து வைத்தார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




