தூத்துக்குடி மாவட்டம் வள்ளியம்மாள்புரம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ரேஷன் கடை இல்லாததால், சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பன்னம்பாறை கிராமத்திற்கு சென்று பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கும் நிலை உள்ளது. இந்நிலையில், பேருந்து வசதியும் இல்லாததால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பாஜக நிர்வாகிகள் தலைமையில் இன்று வள்ளியம்மாள்புரம் பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கிராமத்தில் உடனடியாக ரேஷன் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
வள்ளியம்மாள்புரத்தில் ரேஷன் கடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
வள்ளியம்மாள்புரத்தில் ரேஷன் கடை அமைக்க பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் வள்ளியம்மாள்புரத்தில் ரேஷன் கடை இல்லாததால், 5 கி.மீ. தொலைவில் உள்ள பன்னம்பாறைக்கு சென்று பொருட்கள் வாங்கும் அவலநிலை உள்ளது. இதனால் பெண்கள், முதியவர்கள் சிரமப்படுவதாக கூறி, கிராமத்தில் ரேஷன் கடை அமைக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




