காஞ்சிபுரம் மாவட்டம் சுமந்திரம்மேடு கிராமத்தில் உள்ள ஏரியில், தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சுமந்திரம்மேடு பகுதியில் உள்ள இந்த ஏரி, அப்பகுதி மக்களின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஏரியின் மேற்கு பகுதியில் மர்ம நபர்கள் சிலர் தினமும் தொழிற்சாலை கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பதாக கூறப்படுகிறது. இதனால், கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகையால் காற்று மாசு ஏற்படுவதுடன், அப்பகுதி மக்களுக்கு சுகாதார பாதிப்பும், தொற்று நோய் அபாயமும் ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், கழிவுகளை எரிப்பதால் உருவாகும் சாம்பல் மழைக்காலங்களில் ஏரி நீரில் கலந்து, நீரையும் மாசுபடுத்தும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, ஏரியில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டி எரிப்பவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நீர்வளத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் ஏரியில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டி எரிப்பு
சுமந்திரம்மேடு ஏரியில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதால் காற்று மற்றும் நீர் மாசு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்
காஞ்சிபுரம் மாவட்டம் சுமந்திரம்மேடு ஏரியில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதால் காற்று மற்றும் நீர் மாசு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கழிவுகளை கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
