நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்–குன்னூர் மலைப்பாதையில் ஆங்காங்கே மண் சரிவு, மரங்கள் விழுவது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன இந்நிலையில், குன்னூர் அருகே அருவங்காடு ஜெகதளா பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவி தேவகி, மகன் மற்றும் உறவினர்களுடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு, காரில் மீண்டும் குன்னூர் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். கார் மேட்டுப்பாளையம்–குன்னூர் மலைப்பாதையில் பர்லியார் கீழ்ப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, மலையில் இருந்து திடீரென ராட்சத பாறை ஒன்று உருண்டு வந்து காரின் பின்பகுதியில் விழுந்தது. பாறை விழுந்த வேகத்தில் காரின் பின்பகுதி பலத்த சேதமடைந்தது. காரின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி தேவகி ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி தேவகி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கனமழை காரணமாக மலைப்பாதையில் தொடர்ந்து பாறைகள் மற்றும் மரங்கள் விழும் அபாயம் இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னூர் மலைப்பாதையில் சென்ற கார் மீது பாறை விழுந்து விபத்து - ஒருவர் பலி
மலையில் இருந்து ராட்சத பாறை ஒன்று திடீரென உருண்டு வந்து காரின் மீது விழுந்ததில், ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம்–குன்னூர் மலைப்பாதையில் கனமழை பெய்து வரும் நிலையில், மலையில் இருந்து ராட்சத பாறை ஒன்று திடீரென உருண்டு வந்து காரின் மீது விழுந்ததில், ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
