சென்னை அம்பத்தூரில் ரூ.5,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட டேட்டா சென்டரை, தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் இணைந்து திறந்து வைத்தனர். 2024-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சிங்கப்பூரைச் சேர்ந்த கேபிட்டாலேண்ட் நிறுவனம் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த மையத்தை அமைத்துள்ளது. 56 மெகாவாட் மின்திறன் கொண்ட இந்த டேட்டா சென்டரில் 4,900 சர்வர் ரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கியத் திட்டமாக இது பார்க்கப்படுகிறது. இந்த திறப்பு விழாவில் சிங்கப்பூரின் பாரம்பரிய முறைப்படி அன்னாசிப்பழத்தை உருட்டி வைத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த டேட்டா சென்டர் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் டிஜிட்டல் வளர்ச்சிக்கும், தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றத்துக்கும் இந்தத் திட்டம் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பத்தூரில் பிரமாண்ட தரவு மையம் திறந்து வைத்தார் - முதலமைச்சர் விஜய்
அம்பத்தூரில் ரூ.5,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட டேட்டா சென்டரை, முதலமைச்சர் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் இணைந்து திறந்து வைத்தனர்.
சென்னை அம்பத்தூரில் ரூ.5,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட டேட்டா சென்டரை, முதலமைச்சர் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் இணைந்து திறந்து வைத்தனர். 56 மெகாவாட் மின்திறன் கொண்ட இந்த மையம் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




