ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள லட்டு பிரசாதம் தயாரிப்புக் கூடத்தில் இன்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ மளமளவெனப் பரவியதால் கோயில் வளாகம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அப்போது பணியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். அருகிலிருந்த பக்தர்களும் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர்.இந்த தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், கோயில் ஊழியர்களுடன் இணைந்து போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டுகள் தயாரிக்கப்படும் இந்தக் கூடத்தில் நெய் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், பக்தர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி கோயில் லட்டு தயாரிப்புக் கூடத்தில் தீ விபத்து
ஸ்ரீகாளஹஸ்தி கோயில் லட்டு தயாரிப்புக் கூடத்தில் கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி கோயில் லட்டு தயாரிப்புக் கூடத்தில் கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். ஊழியர்கள், பக்தர்கள் யாருக்கும் காயமில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




