உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

விலைவாசி உயர்வே தமிழக மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அளிக்கும் பரிசு – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். ஆவின் இனிப்புகளின் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
விலைவாசி உயர்வே தமிழக மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அளிக்கும் பரிசு – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவலை தெரிவித்துள்ளார். அரிசி, சர்க்கரை, பருப்பு, புளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் குடும்பங்களின் அன்றாடச் செலவுகள் அதிகரித்து, பொதுமக்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், காவிரி நீர் மேலாண்மை தொடர்பாகவும் தமிழக அரசு திட்டமிட்டுச் செயல்படவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சம்பா சாகுபடிக்குத் தேவையான நீரைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளின் நலனைக் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தமிழக மக்களின் நலனையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்பதே அவரது கோரிக்கை வைத்துள்ளார். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
விலைவாசி உயர்வே தமிழக மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அளிக்கும் பரிசு – | விசில் மீடியா