உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

ராசிபுரம் கோவிலில் அமைச்சர் அருண்ராஜ் தரிசனம் - தமிழக வளர்ச்சி குறித்து பேட்டி

ராசிபுரம் கோவிலில் தரிசனம் செய்த அமைச்சர் அருண்ராஜ், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் கோவில் திருப்பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

ராசிபுரம் அழியா இலங்கை அம்மன் கோவிலில் தரிசனம் செய்த அமைச்சர் அருண்ராஜ், இரண்டு ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றும், ஐந்து ஆண்டுகளில் தமிழகம் இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலமாக மாறும் என்றும் தெரிவித்தார்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
ராசிபுரம் கோவிலில் அமைச்சர் அருண்ராஜ் தரிசனம் - தமிழக வளர்ச்சி குறித்து பேட்டி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கூனவேலம்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு அமைச்சர் அருண்ராஜ் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் தர்மகர்த்தா மற்றும் பூசாரிகள் கும்ப மரியாதை அளித்து பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சிறுவயது முதலே இந்தக் கோவிலுக்கு வந்து செல்வதாகவும், தனது தாத்தாவின் விருப்பப்படி கோவில் திருப்பணிகளை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், பழுதடைந்த கோபுரங்கள் சீரமைக்கப்பட்டு, இன்னும் இரண்டு ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.இதை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் லஞ்சம், ஊழல் கலாச்சாரத்தை ஒழித்துள்ளதாகவும், ஐந்தாண்டு ஆட்சியின் முடிவில் தமிழகம் இந்தியாவிலேயே வளர்ச்சியடைந்த மாநிலமாகத் திகழும் என்றும் தெரிவித்தார். ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை பணிகளுக்காக கூடுதலாக ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு முதல் மூன்று மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் கூறினார்.  

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50