நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை நடுவீதி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள செல்வகுமார் என்பவருக்குச் சொந்தமான இருசக்கர வாகன பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் பட்டறையில் வாட்டர் சர்வீஸ் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த தகவலறிந்து வந்த நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராசிபுரம் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
இருசக்கர வாகன பட்டறையில் வாட்டர் சர்வீஸ் செய்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் கார்த்திக் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் இருசக்கர வாகன பட்டறையில் வாட்டர் சர்வீஸ் செய்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் கார்த்திக் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




