கன்னியாகுமரி மாவட்டத்தின் பேச்சிப்பாறை, கோதையாறு, பெருஞ்சாணி, குற்றியாறு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் உள்ள மரங்களை முறித்து சேதப்படுத்தும் யானைகள், இரவு நேரங்களில் வனத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள காளிகேசம் அரசு ரப்பர் தோட்டம் அருகே ஓடும் காட்டாற்றுக்கு சிறிய குட்டிகளுடன் வந்த யானைகள், ஆற்றில் இறங்கி தாகம் தணித்ததுடன் நீரில் விளையாடியும் மகிழ்ந்தன. சில மணி நேரம் அங்கு இருந்துவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. இதனால் ரப்பர் தோட்டத்தில் அதிகாலை மற்றும் காலை நேரங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்க வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அகழிகள் அமைக்கவும், சோலார் மின்வேலிகளைச் சீரமைக்கவும் மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பொதுமக்கள் இரவு நேரங்களில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
காளிகேசம் காட்டாற்றில் தாகம் தணிக்க வந்த யானைக்கூட்டம் – அச்சத்தில் மலை கிராம மக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் காளிகேசம் அருகே காட்டாற்றில் தாகம் தணிப்பதற்காக குட்டிகளுடன் வந்த காட்டு யானைகளின் கூட்டத்தைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் காளிகேசம் அருகே காட்டாற்றில் குட்டிகளுடன் வந்த யானைக்கூட்டம் தாகம் தணித்து நீரில் விளையாடியது. வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
