உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

மாமல்லபுரத்தில் கடைகளில் தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

மாமல்லபுரத்தில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விதிமீறிய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மாமல்லபுரத்தில் நகராட்சி அதிகாரிகள் பல்வேறு கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Team - Editorial

இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
மாமல்லபுரத்தில் கடைகளில்  தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

மாமல்லபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். டி.கே.எம் சாலை, கோவளம் சாலை, கிழக்கு ராஜவீதி, மேற்கு ராஜவீதி, ஒத்தவாடை தெரு, யானைகட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தேநீர் கடைகள், மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், பூக்கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளில் இந்த சோதனை நடைபெற்றது.நகராட்சி ஆணையர் அபர்ணா உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில் நகராட்சி பணியாளர்கள் இந்த திடீர் ஆய்வை மேற்கொண்டனர்.இதில் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்பட்டு, சுமார் 100 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50