உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

மது கிடைக்காத விரக்தி – சாலையில் படுத்து உருண்டு மதுப்பிரியர்கள் போராட்டம்

முசிறியில் மதுபானக் கடைகள் திறக்கப்படாததால் மது கிடைக்காமல் கோபமடைந்த மதுப்பிரியர்கள், சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் முசிறியில் மதுபானக் கடைகள் திறக்கப்படாததால் மது கிடைக்காமல் கோபமடைந்த மதுப்பிரியர்கள், சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:
மது கிடைக்காத விரக்தி – சாலையில் படுத்து உருண்டு மதுப்பிரியர்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் முசிறியில் இரண்டு அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான பிரச்சினை காரணமாக இரண்டு கடைகளும் திறக்கப்படவில்லை. இதனால் மது வாங்குவதற்காக வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து,  திருச்சி - நாமக்கல் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மதுபானக் கடையில் ஏராளமானோர் குவிந்து மது வாங்கினர். இதனால் அங்கிருந்த மதுபாட்டில்கள் விரைவாக விற்றுத் தீர்ந்தன. இதை தொடர்ந்து மது கிடைக்காததால் கோபமடைந்த மதுப்பிரியர்கள் தனியார் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், திருச்சி - நாமக்கல் மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே படுத்தும், உருண்டும் மறியல் செய்தனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைத்தனர்.இந்தப் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு மதுபானக் கடைகளை விரைவாகத் திறக்க வேண்டும் என மதுப்பிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50