உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

ராசிபுரம் அருகே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான போக்சோ வழக்கு குற்றவாளி கைது

நீதிமன்ற பிடிவாரண்டைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த போக்சோ வழக்கு குற்றவாளி பரமசிவத்தை நாமகிரிப்பேட்டை அருகே ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

ராசிபுரம் அருகே போக்சோ மற்றும் குழந்தை திருமணத் தடுப்புச் சட்ட வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பரமசிவத்தை, நாமகிரிப்பேட்டை பேருந்து நிலையம் அருகே ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
ராசிபுரம் அருகே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான போக்சோ வழக்கு குற்றவாளி கைது

 சேலம் மாவட்டம், குள்ளக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் மீது 2025-ம் ஆண்டு ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ மற்றும் குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பரமசிவம், 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் நீதிமன்ற விசாரணைக்கு பரமசிவம் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து, அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இருப்பினும், அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இதனால், ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், நாமகிரிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாமகிரிப்பேட்டை பேருந்து நிலையம் அருகே பரமசிவம் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு விரைந்து சென்ற ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார், பரமசிவத்தை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50