நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிகளில் அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், பட்டணம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த சிவக்குமார் , தேங்கல்பாளையத்தைச் சேர்ந்த நவீன் புதுப்பாளையம் ஆலங்காட்டு வீதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்யப்பட்டனர். இதில் சிவக்குமார், கேசவன் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விக்னேஸ்வரன் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். புதுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விக்னேஸ்வரன் கடந்த 10 ஆண்டுகளாகச் சந்து கடை நடத்தி வந்ததாகவும், மாமூல் கொடுத்து மதுபான விற்பனையைத் தொடர்ந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தக் கைது சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரத்தில் 10 ஆண்டுகளாகச் சந்து கடை நடத்தி வந்தவர் கைது
ராசிபுரம் அருகே, அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




