திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சின்னகலையமுத்தூர் பகுதியில் கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து கஞ்சா பதுக்கி விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே பழனி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் மற்றும் பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த தளபதி என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், கஞ்சா விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் அவர் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
பழனியில் 23 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
பழனியில் 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திண்டுக்கல்லை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மேட்டுப்பட்டியை சேர்ந்த தளபதி (25) என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




