சென்னை புழல் சிறை வாசலில் முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படும் வேலூர் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் டீட்டா சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர். திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போது, அவருக்கு ஆதரவாக தி.மு.க.வினர் சிறை வாசலில் திரண்டனர். அப்போது கவுன்சிலர் டீட்டா சரவணன், கரூர் சம்பவத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியுள்ளார். இந்தப் பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, புழல் போலீசார் அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவான அவரைப் பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், விழுப்புரம் பகுதியில் இருந்த டீட்டா சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு - தலைமறைவாக இருந்த தி.மு.க. கவுன்சிலர் கைது
முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வேலூர் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் டீட்டா சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை புழல் சிறை வாசலில் முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வேலூர் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் டீட்டா சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




