உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியல்

வேப்பம்பட்டு குடியிருப்புப் பகுதிக்கு அருகே மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு குடியிருப்புப் பகுதிக்கு அருகே மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் இன்று ரேணிகுண்டா நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியல்

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ஊராட்சியில் அரசு உத்தரவின்படி மின் மயானம் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. இதையடுத்து, குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மின் மயானம் அமைப்பதால், தகனத்தின்போது வெளியாகும் புகையால் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், திருவள்ளூர் சப் கலெக்டர் பிரசாந்த் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மின் மயானம் அமைப்பது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். தற்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இது குறித்து அரசுக்குத் தெரிவிக்கப்படும் என்றும், அரசு பரிசீலனை செய்து முடிவெடுக்கும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றன

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியல் | விசில் மீடியா