உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

12ம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு தங்க நெக்லஸ் வழங்கிய முதலமைச்சர் விஜய்

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி ரிக்ஷிதாவுக்கு முதலமைச்சர் விஜய் தங்க நெக்லஸ் வழங்கி பாராட்டினார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2025-26ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த அரியலூர் மாணவி ரிக்ஷிதாவுக்கு முதலமைச்சர் விஜய் தங்க நெக்லஸ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். மாணவர்களுக்கு சான்றிதழ்களும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டன.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
12ம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு தங்க நெக்லஸ் வழங்கிய முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2025-26ம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை முதலமைச்சர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி வருகிறார். இதையடுத்து, முதற்கட்டமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இவ்விழாவில் முதலமைச்சர் விஜய் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். இதில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி.ரிக்ஷிதா என்ற மாணவிக்கு தங்க நெக்லஸ் வழங்கி முதலமைச்சர் விஜய் பாராட்டினார். மேலும், மாணவர்களின் கல்வி சாதனைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50