தென்காசி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக டாக்டர் ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இதையடுத்து, கனிமவளக் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் அரசு உடமையாக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கிராமங்கள் தோறும் சிசிடிவி கேமராக்கள் அமைத்து குற்றச்செயல்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து, மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கத் தனிக்கவனம் செலுத்தப்படும். சாலை விபத்துகளைக் குறைக்கவும் போக்குவரத்தைச் சீரமைக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என புதிய எஸ்.பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதையடுத்து தென்காசி மாவட்ட மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
தென்காசியில் கனிமவளக் கடத்தலுக்கு குண்டர் சட்டம் பாயும் – புதிய எஸ்.பி அதிரடி அறிவிப்பு
தென்காசியில் கனிமவளக் கடத்தலுக்கு குண்டர் சட்டம், கிராமங்களில் சிசிடிவி, போதைப்பொருள் ஒழிப்பு என புதிய எஸ்.பி. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட புதிய எஸ்.பி. ஸ்டாலின் ஐபிஎஸ், கனிமவளக் கடத்தல்காரர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரித்ததுடன், சிசிடிவி, போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




