சென்னை காசிமேட்டைச் சேர்ந்த செல்வழகனுக்குச் சொந்தமான விசைப்படகு, கடந்த மாதம் 29-ம் தேதி 9 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றது. ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டணம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, முரசு புயல் காரணமாக வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து படகு பாதுகாப்பாக நிஜாம்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் கடந்த 2-ம் தேதி இரவு படகு மீண்டும் புறப்பட்டுச் சென்றபோது, நடுக்கடலில் திடீரென என்ஜின் பழுதடைந்துள்ளது. இது குறித்து தகவல் கிடைத்த நிலையில், அதன் பிறகு படகில் இருந்து எந்தத் தொடர்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து மீன்வளத்துறை மூலம் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவல் படைக் கப்பல்கள் மூலம் 9 மீனவர்களையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து, மாயமான மீனவர்களின் நிலை குறித்து குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.
காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயம் - ஹெலிகாப்டர் மூலம் தீவிர தேடுதல்
காசிமேடு மீனவர்கள் 9 பேர் நடுக்கடலில் மாயமானதால், ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல் படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் ஆந்திர கடல் பகுதியில் படகு என்ஜின் பழுதானதால் மாயமாகினர். அவர்களை ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல் படையினர் தேடி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
