கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாங்கப்பாறையை சேர்ந்தவர் அபிராம். இவர் 1-ம் தேதி நண்பரை சந்தித்துவிட்டு வருவதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். செல்போன் சிக்னலை வைத்து போலீசார் தேடிய போது, புதர் பகுதியில் சாக்கு மூட்டைக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது சிறுமியுடன் அபிராமுக்கு பழக்கம் இருந்தது தெரிய வந்தது. இதனால் கோபமடைந்த சிறுமியின் காதலன், சிறுமி மூலம் அபிராமை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கு ஏற்பட்ட தகராறில் அபிராமை கீழே தள்ளி கழுத்தில் மிதித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து சிறுமி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், உண்மையில் கொலைக்கும்பல் அபிராமின் நண்பரை குறி வைத்ததாகவும், தவறுதலாக அபிராம் சிக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம் அருகே பிளஸ் 2 மாணவன் கொடூர கொலை - சிறுமி உட்பட மூவர் கைது
திருவனந்தபுரத்தில் பிளஸ் 2 மாணவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுமி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் 17 வயது பிளஸ் 2 மாணவன் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், இன்ஸ்டாகிராம் பழக்கம் காரணமாக கொலை நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




