சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.இந்த கோரிக்கை கடந்த 1980-ம் ஆண்டு முதலே நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது தென்னிந்தியாவைச் சேர்ந்த வழக்காடிகள் நீதிக்காக டெல்லிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணச் செலவு மற்றும் கால விரயம் ஏற்படுகிறது. சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்கப்பட்டால் தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்தியாவின் அனைத்து மாநில மக்களும் பயனடைவார்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றக் குழுக்களின் பரிந்துரைகள், சட்ட ஆணைய அறிக்கைகள் மற்றும் இந்தியாவின் கூட்டாட்சி தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றத்தின் முந்தைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். இதை தொடர்ந்து, ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே அரசியலமைப்பின் நோக்கம் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
தென்னிந்திய மக்கள் டெல்லிக்கு செல்லாமல் நீதியைப் பெறும் வகையில் சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
