திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடாக பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்பில் மகேஷை நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், விசாரணையின் போது தன்னை உடல் ரீதியாகவோ, மனதளவிலோ துன்புறுத்தக்கூடாது என அன்பில் மகேஷ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
6-ம் தேதி வரை நீதிமன்ற காவல் - அன்பில் மகேஷை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவு
முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷை நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷை நவம்பர் 6-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
