உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

மாமல்லபுரம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் தேவேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
மாமல்லபுரம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து –  ஓட்டுநர் பலி

 செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் பகுதியில் இருந்து சென்னைக்கு எம்-சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று இன்று காலை கிழக்கு கடற்கரை சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை விழுப்புரம் மாவட்டம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் ஓட்டிச் சென்றார். மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி மேம்பாலம் அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரிக்குள் சிக்கிய தேவேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி அவரது உடலை மீட்டனர். பின்னர் உடல் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50