உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

மரத்தில் தூக்குப்போட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை

சென்னை பரங்கிமலையில் பணியாற்றிய ஆயுதப்படை காவலர் அஜித்குமார், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்தார்.

சென்னை பரங்கிமலை ஆயுதப்படையில் பணியாற்றிய காவலர் அஜித்குமார், முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
மரத்தில் தூக்குப்போட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை

சென்னை பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்தவர் அஜித்குமார். இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர். சென்னை திரிசூலம் இரயில் நிலையம் எதிரே உள்ள குடியிருப்பில் வசித்து வந்தார்.இந்நிலையில், அஜித்குமார் சமீபத்தில் முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தொடர்ந்து வலி மற்றும் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, நேற்று மதியம் குடியிருப்பு அருகே உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் அஜித்குமார் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மீனம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குடியிருப்பில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50