கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கண்ணட அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் கீர்த்தனா. பர்கூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஆறு மாதங்களாக கீர்த்தனா தனது கணவரைப் பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு கீர்த்தனாவின் வீட்டிற்கு வந்த சந்திரசேகரன், குழந்தையைத் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது கோபமடைந்த சந்திரசேகரன், வீட்டிலிருந்த சுத்தியலால் மாமனார் ஆனந்தனின் முதுகில் தாக்கியதுடன், தான் வைத்திருந்த கத்தியாலும் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆனந்தன், முதலில் மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சந்திரசேகரனைத் தேடி வருகின்றனர்.மேலும், இச்சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
மத்தூர் அருகே மாமனாரை சுத்தியல், கத்தியால் தாக்கிய மருமகன்
மத்தூர் அருகே குடும்பத் தகராறில் மாமனாரை சுத்தியல் மற்றும் கத்தியால் தாக்கிய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே குடும்பத் தகராறில் மாமனாரை சுத்தியல் மற்றும் கத்தியால் தாக்கிய மருமகனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




