திண்டுக்கல் மாவட்டம், கிழக்கு கோவிந்தபுரம், அஞ்சுகம் தெருவை சேர்ந்தவர் குருபிரகாஷ் பாண்டியன். இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு நிகழ்வில் வளர்ப்பு பிராணிகளை கண்காட்சி செய்துவிட்டு, பாம்பு, கருந்தேள், வெள்ளை எலி, நாய், நத்தை, சிலந்தி, பச்சோந்தி போன்ற வளர்ப்பு பிராணிகளை எடுத்துக்கொண்டு, தனது காரில் சென்னை நோக்கி புறப்பட்டு உள்ளார். அப்போது, திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர வேப்ப மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேப்பமரத்து அருகே இருந்த 11ம் வகுப்பு மாணவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, 5 பேரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து, காரில் இருந்த பாம்பு, உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை வனத்துறையினர் மீட்டு, அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.
மணப்பாறை அருகே கார் விபத்து - இருவர் பலி
மணப்பாறை அருகே கார் மோதி, சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கார் மோதி, சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




